முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நட்சத்திர விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நட்சத்திர விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
X

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கே.சி.வீரமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் வந்த நிலையில், சென்னை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 28 மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறையினரால் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

தற்போது ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஏலகிரி மலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி உள்ள அவரது நடசத்திர விடுதியில் அதிகாரிகள் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
ai in agriculture india