ஓசூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்களுக்கு எச்சரிக்கை
X

ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து, 1548 கன அடிக்கும் மேல் நீர்திறப்பு.

ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து, 1548 கன அடிக்கும் மேல் நீர்திறப்பால், தென்பெண்ணையாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு.

ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து, 1548 கன அடிக்கும் மேல் நீர்திறப்பால், தென்பெண்ணையாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை, 2,146 கன அடியாக இருந்த நிலையில் இன்று 1548 கன அடியாக குறைந்துள்ளது.

அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.02 அடிக்கு நீர் இருப்பால், தென்பெண்ணையாற்றில் இன்று வினாடிக்கு, 1548 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த, 6 நாட்களாக தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு, 2,000 கன அடிக்கு மேல் தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் இன்று 1548 கன அடியாக குறைந்துள்ளது.

இருந்து போதும் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், நீரில் மூழ்கிய தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் எனவும், வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், ஆடு, மாடு கழுவ, துணி துவைக்க ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!