ஓசூர் காவல்துறையினர் பொதுமக்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு

ஓசூர் காவல்துறையினர் பொதுமக்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு
X

ஒசூர் காவல் துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்வு முகாம்.

ஓசூரில் மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் முகாம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காவல்துறை சார்பில் பொதுமக்களின் தங்களுடைய பிரச்சனைகளை உடனடியாக தீர்வு காண்பதற்கான முகாம் நடத்தப்பட்டன.

மாவட்ட கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வின் அறிவுறுத்தலின்படி, ஓசூர் துணை கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் ஓசூர் சரக காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார், பொது மக்களின் அன்றாடம் மற்றும் குடும்ப பிரச்சனைகள், நில பிரச்சனைகள் உட்பட நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் உள்ள பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து அறிவுரைகள் வழங்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

காவல்துறை சார்பில் இன்று நடைப்பெற்ற முகாமில் பொதுமக்கள் சார்பில் சுமார் 234 பேர் பங்கேற்றனர். இதில் 68 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டு இதில் உடனடியாக 59 பேரின் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த தீர்வு உடனடியாக காணப்பட்டதால் பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. இதே போல் மாதம் ஒரு முறை நடைபெறும் என துணை கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்தார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!