ஓசூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்., 3 கடைசி

ஓசூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்., 3 கடைசி
X

கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டம்.

ஓசூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அக்., 3க்குள் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஒசூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்வது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசினார்.

இதில், பேகேப்பள்ளி, நல்லூர், சென்னசந்திரம், பேரண்டப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், ஒன்னல்வாடி, அச்செட்டிப்பள்ளி, பூனப்பள்ளி மற்றும் கொத்தகொண்டப்பள்ளி உள்ளிட்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய மாவட்ட கலெக்டர், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது ஒசூர் மாநகராட்சியை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்துள்ள பகுதிகளை ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

அதன்படி பேகேப்பள்ளி, நல்லூர், சென்னசந்திரம், பேரண்டப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், ஒன்னல்வாடி, அச்செட்டிப்பள்ளி, பூனப்பள்ளி மற்றும் கொத்தகொண்டப்பள்ளி ஆகிய ஊராட்சி பொதுமக்களிடம் இந்த கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்களது கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும்.

வருகிற அக்டோபர் 3ம் தேதிக்குள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெயரில் ஓசூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!