ஓசூர் மாநகராட்சி எல்லையை விரிவாக்கம்: 4ம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம்
பைல் படம்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக துறையின் 2021&22ம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது, ஓசூர் மாநகராட்சியை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார். இதையடுத்து ஓசூர் மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய முன்மொழிவுகளை அனுப்பி வைக்கும் பொருட்டு, வருகிற 4ம் தேதி காலை 10.30 மணிக்கு கருத்துக் கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெறுகிறது.
இதில், பேகேப்பள்ளி, நல்லூர், சென்னசந்திரம், பேரண்டப்பள்ளி, தொரப்பள்ளி, அக்ரஹாரம், அச்செட்டிப்பள்ளி, பூனப்பள்ளி மற்றும் கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி பகுதிகளிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கருத்து கேட்புக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu