ஹோலி பண்டிகை தகராறு : தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

ஹோலி பண்டிகை தகராறு :  தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
X
ஹோலி பண்டிகை தகராறில், தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்


சிப்காட் அருகே ஹோலி பண்டிகை கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் சந்திரபண்டா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜுஜுவாடி பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்கள் சிப்காட் அடுத்த ஜூஜூவாடி காமராஜ் நகர் பகுதியில் ஹோலிப் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

அப்போது இவருக்கும் இவரது நண்பர்களான முன்னைகட்டை, சிப்பகவுடா, பிந்துகுண்டியா ஆகிய 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டு இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பாஸ்கர் சந்திரபண்டாவை கை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பாஸ்கர் சந்திரபண்டா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு