ஓசூர் சோதனை சாவடியில் ரூ.1.22 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: இருவர் கைது

ஓசூர் சோதனை சாவடியில் ரூ.1.22 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட குப்புசாமி, மகேந்திரன்.

ஓசூர் சோதனை சாவடியில் தடைசெய்யப்பட்ட சுமார் ரூ.1.22 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் சிப்காட் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிருத்தி சோதனை செய்தபோது காய்கறி மூட்டைகளுக்கு அடியில் 35 குட்கா பான் மசாலா மூட்டைகளை கடத்தி வந்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து, மஹேந்திரா பிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்த சிப்காட் போலீஸார் வழக்கை பதிவுசெய்து விசாரணை செய்ததில், பெங்களூருவிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து ரூ.1 லட்சத்தி 22 ஆயிரம் மதிப்பிலான 212 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சியை சேர்ந்த குப்புசாமி (31) மற்றும் குபேந்திரன்(22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக சிப்காட் போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு