ஜிஎஸ்டி வரி விதிப்பு சிறு, குறு தொழிற்சாலைகளை அழித்துவிட்டது: சங்கத் தலைவர் பேட்டி.

ஜிஎஸ்டி வரி விதிப்பு சிறு, குறு தொழிற்சாலைகளை அழித்துவிட்டது: சங்கத் தலைவர் பேட்டி.
X

ஓசூரில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி சிறு குறுந்தொழிற்சாலை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளை அழித்துவிட்டது என சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தியும் நாடு தழுவிய போராட்டம் சிறு குறுந்தொழிற்சாலை சங்கத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓசூரிலும் நடைபெற்றது.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் பெரு நிறுவனங்கள் பல மடங்கு வளர்ச்சியும், சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அழிவுப்பாதையை நோக்கிச் சென்று விட்டது என Hostia தலைவர் வேல்முருகன் ஓசூரில் ராம் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த ஓராண்டில் இரும்பு காப்பர் அலுமினியம் ரப்பர் பிளாஸ்டிக் போன்ற அனைத்து மூலப்பொருட்களின் விலை கிட்டத்தட்ட இரண்டு மூன்று மடங்கு வரை உயர்ந்திருக்கிறது. இந்த கரோனா காலகட்டத்தில் நுகர்வு குறைவாக உள்ள காலகட்டத்தில் இவ்வளவு பெரிய விலை ஏற்றம்.

இந்த மூலப் பொருட்களின் விலை ஏற்றம் இதற்கான காரணம் என்ன? இதை ஏன் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதற்கு உடந்தையாக மத்திய அரசாங்கம் இருக்கிறது. இரும்பு போன்ற மூலப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள் அபரிதமான லாபத்தை அடைந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 3000 சதவீதம் வரை ஒவ்வொரு காலாண்டிலும் ரூ. 6,000 கோடி ரூ.7 ஆயிரம் கோடி பத்தாயிரம் கோடி என்று jcw டாட்டா ஸ்கையில் மிட்டல் போன்ற நிறுவனங்கள் மிகப் பெரிய கொள்ளை லாபத்தை வந்து அடைந்திருக்கின்றன.

இந்த கச்சா பொருளை வாங்கும் சிறு தொழிலை செய்ய முடியாமல் அழிந்து வருகிறது. பெரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு எல்லாம் மிகப் பெரிய அளவில் நஷ்டம். இன்று நாடு தழுவிய அளவில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன நாட்டின் சுதந்திர நாட்டில் முதன்முறையாக ஒரு தொழில்முனைவோர் வீதிக்கு வந்து போராட வேண்டி ஒரு காலகட்டத்திற்கு ஒன்றிய அரசாங்கம் எங்களை தள்ளி உள்ளது என்பது மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் வேதனையும் அளிக்கின்றது என்று தெரிவித்தார்.

ஜிஎஸ்டி என்ற கொடுமையான வரி முற்றிலும் சிறு தொழில்களை அழித்து விட்டது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்து இல்லை. இதை பற்றி வேண்டுமானால் அனைத்து நிலை அதிகாரிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைத் கேட்டுப்பாருங்கள்.

இப்போது உள்ள சட்டம் மிகவும் கொடுமையானது. அதை நீக்கிவிட்டு பழைய வழி முறையை கொண்டுவரவேண்டும். இந்த கச்சா பெட்ரோலிய மூலப் பொருட்கள், இரும்பு போன்ற மூலப்பொருட்கள் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கின்றோம். மத்திய அரசு கண்டுகொள்ளவில்ல எனில் எங்களுடைய போராட்டத்தை அடுத்த அளவில் மிகப்பெரிய அளவில் போராட்டத்திற்கு கொண்டு செல்வோம் எனக் கூறினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிறு குறுந் தொழிற்சாலை நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!