500 ரூபாய் கள்ளநோட்டு கொடுத்து காய்கறி வாங்கிய கட்டிட மேஸ்திரி கைது

500 ரூபாய் கள்ளநோட்டு கொடுத்து காய்கறி வாங்கிய கட்டிட மேஸ்திரி கைது
X
ஓசூர் உழவர் சந்தையில் 500 ரூபாய் கள்ள நோட்டு கொடுத்து காய்கறி வாங்கிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி கடை வைத்துள்ளவர் ஏ.காமனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த காமாட்சி.இவரது கடைக்கு ஓசூர் எழில் நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான தர்மன் என்பவர் வந்துள்ளார். அப்போது காய்கறி வாங்கிய அவர், இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார்.

அந்த நோட்டுகள் கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்தார் காமாட்சி, இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் எஸ்.ஐ குமார் வழக்கு பதிவு செய்து, மேஸ்திரி தர்மனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!