பணம் வைத்து சூதாட்டம்: 8 பேர் கைது - ரூ.11 ஆயிரம் பறிமுதல்

பணம் வைத்து சூதாட்டம்: 8 பேர் கைது -  ரூ.11 ஆயிரம் பறிமுதல்
X
ஓசூர் சிப்காட் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை கைது செய்த போலீசார், 11 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீஸ் எஸ்எஸ்ஐ காளியப்பன் மற்றும் போலீசார், மூக்காண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், பசிகுமார், வீரபத்திரன், சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்துனர். அவர்களிடம் இருந்த பணம் ரூ. 10,170ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சூளகிரி எஸ்ஐ கணேஷ்பாபு மற்றும் போலீசார், செம்பரசனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த எல்லப்பா, பாஸ்கர்,, முரளி, பீமாண்டப்பள்ளி சீனிவாசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் ரூ. 770ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று, காவல்துறையினரின் ரோந்தின்போது, இருவேறு இடங்களில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த 8 பேர் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ. 11 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு