பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை தலைமறைவாக இருந்த 3 பேர் கைது 4 பேர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண்

பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை   தலைமறைவாக இருந்த 3 பேர் கைது   4 பேர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி விவசாயிமுருகன்(50) என்பவரை கொலை செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பணத்திற்காக விவசாயியை கடத்தி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில, 4 பேர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பணத்திற்காக விவசாயியை கடத்தி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில், 4 பேர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் முருகப்பா(எ)முருகன்(50). விவசாயி. இவர் சில நாட்களுக்கு முன்னர் தனது விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறி டூவீலரில் புறப்பட்டுச் சென்றார். பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி ரெஜினம்மா சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் முருகனை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரம் அருகே ராஜாபுரத்தில் முருகன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக ஓசூர் டிஎஸ்பி (பொறுப்பு) சங்கர் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், முருகனிடம் நிலம் விற்ற பணம் 30 லட்சம் ரூபாய் இருந்ததை அவரது நண்பர் தேன்கனிக்கோட்டை தாலுகா குந்துமாரனப்பள்ளியை சேர்ந்த அம்ரிஷ்(26) தெரிந்து கொண்டு அவரை கடத்தி மிரட்டி பணத்தை பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது. திட்டப்படி அம்ரிஷ் தனது நண்பர்கள் ஓசூர் மூக்கண்டப்பள்ளி ஹரிஷ்(21), சூளகிரி சப்படி முருகன்(21) உள்பட 8 பேருடன் சம்பவத்தன்று முருகனை ஜீப்பில் கடத்தி உள்ளனர். அப்போது முருகன் வாகனத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யவே அவரை அந்த கும்பல் தாக்கி கொலை செய்து உடலை தொரப்பள்ளி அருகே கல்குவாரி ஒன்றில் தேங்கி இருந்த தண்ணீரில் போட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த குந்துமாரனப்பள்ளி அம்ரிஷ்(26), ஓசூர் மூக்கண்டப்பள்ளி கொத்தூர் ஹரிஷ்(21), சப்படி முருகன்(21) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து முருகன் கொலையில் தொடர்புடைய நல்லகானகொத்தப்பள்ளி சதீஷ்(25), வெங்கடேசன்(26), கனாப்பட்டி(23), சப்படி நாகன்(23) ஆகிய 4 பேரும் கிருஷ்ணகிரி ஜே.எம். 2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பீட்டர் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரையும் போலீசார் ஓசூர் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த வழக்கில் பெல்லட்டியை சேர்ந்த பிரவீன் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா