ஆற்றில் விழுந்து மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பலி

ஆற்றில் விழுந்து மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பலி
X
தென்பெண்ணை ஆற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்

உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஏனுசோனை கிராமத்தை சேர்ந்தவர் சாலப்பா. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் அனாதையாக அந்த ஊரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் உத்தனப்பள்ளி அருகே உள்ள அக்ரஹாரம் என்ற இடத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்