ஒசூர்- ஐஎன்டியூசி சார்பில் இலங்கை அகதி முகாமில் கிருமி நாசினி தெளிப்பு

ஒசூர்- ஐஎன்டியூசி சார்பில் இலங்கை அகதி முகாமில் கிருமி நாசினி தெளிப்பு
X

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைப்பகுதி இலங்கை அகதிகள் முகாமில், கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.  

ஓசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் உள்ள இலங்கை அகதி முகாமில், ஐஎன்டியூசி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் 200 க்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் குடும்பத்தை சேர்ந்த, 650 நபர்கள் இந்த முகாமில் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் இந்த முகாமில் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் இந்த முகாமில் உள்ளவர்கள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 32 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, ஐஎன்டியூசி தொழில் சங்கம் சார்பில், அகதிகள் முகாம் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி, அகில இந்தியச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான மனோரன் தலைமையில் நடைபெற்றது. கிருமி நாசினி தெளிக்கும் பணியை துவக்கி வைத்த ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன், ஒசூரில் கொரோனா தொற்று குறைந்து வருவதாவும், பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று, கேட்டுக் கொண்டார்.

ஒசூர் வட்டாட்சியர் செந்தில்குமார், வி.எஸ்.டி. டிராக்டர்ஸ் மனித வளத்துறை அதிகாரி சுரேஷ், மிண்டா நிறுவன மனித வளத்துறை தலைவர் அலோக்குமார், தொழிலதிபர் சின்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசமூர்த்தி, முத்தாலி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மாரி தென்னல், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!