மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

மத்திகிரி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர். 

ஓசூர் அருகே மத்திகிரி பேருந்து நிலையத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி பேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாய சங்க மாநில துணை தலைவர் இலகுமையா தலைமையில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகள் மழையால் சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

மாவட்டத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பெய்த மழையினால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர், ராகி, தக்காளி, அவரை, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களில் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அறுவடைக்கு தயராக இருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் முழ்கியதால் விவசாயிகளுக்கு லட்சகணக்கில் பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும் மழையால் நனைந்துப்போன பயிர்கள் முளைத்து உள்ளதால் விசாயிகளுக்கு இடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story