கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறிய வெண் நுரை குறைவு: சீரான போக்குவரத்து

கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறிய வெண் நுரை குறைவு: சீரான போக்குவரத்து
X

கெலவரப்பள்ளி அணை.

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து குறைவால் சீரான வெண் நுரையால் போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் வெளியேறும் நீரில் ரசாயனக் கழிவு கலந்ததால் வெண் நுரை அதிக அளவில் வெளியேறி சாலையை ஆக்கிரமித்தது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் நாகமங்கலம் செல்லும் சாலை அடைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நீரின் வரத்து 2600 கனஅடி ஆகவும், 2900 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தற்போது வெண் நுரை குறைந்துள்ளதால் நேற்று மாலை முதல் சாலை போக்குவரத்து சீரானது.

Tags

Next Story
குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி ஈரோட்டில் தொடக்கம்