தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.1.53 லட்சம் மோசடி: சைபர் கிரைம் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் பக்கமுள்ள கரடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ஓசூரில் பத்தலப்பள்ளி மார்க்கெட் அருகில் தனியார் லேஅவுட்டில் தங்கி உள்ளார். மேலும் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மே மாதம் 25ம் தேதி இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி சீனிவாசன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு எதிர் முனையில் பேசிய நபர் வேலை உள்ளது. அதற்காக ரூ.1லட்சத்து 53 ஆயிரத்து 500 நடைமுறை பணிகளுக்காக கட்ட வேண்டும் என கூறினார்.
அதை நம்பி சீனிவாசன் அந்த பணத்தை அந்த நபரின் கணக்கிற்கு செலுத்தினார். ஆனால் அந்த நபர் ஏமாற்றி சென்று விட்டார். இது குறித்து சீனிவாசன் நேற்று கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu