ஓட்டல்கள், இறைச்சிகடைகள், பழக்கடைகளில் ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை

ஓட்டல்கள், இறைச்சிகடைகள், பழக்கடைகளில் ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை
X

ஓசூரில், இறைச்சிக்கடையில் சோதனை நடத்திய மாநகராட்சி அதிகாரிகள்.

ஓசூரில், உணவு தரம் குறித்து ஒட்டல்கள், இறைச்சிகடைகள் மற்றும் பழக்கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

ஒசூர் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், இறைச்சி கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் தரமில்லாத உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதனையடுத்து ஒசூர் மாநகராட்சி அதிகாரி முத்துமாரியப்பன் தலைமையில், அதிகாரிகள் நகரின் பல்வேறு இடங்களில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஒட்டல்கள் இறைச்சிகடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, இராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுப்போன உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த உணவகத்திற்கு 2 ஆயிரம் அபாராதம் விதிக்கப்பட்டது. இதேபோல பழக்கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் பழங்கள் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அபாரதம் விதிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கெட்டுப்போன உணவு பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. பொதுமக்களின் சுகாதாரத்தை கெடுக்கும் தரமில்லாத உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடைகள் சீல் வைக்கப்படும், ஒசூர் பகுதிகளில் தொடர்ந்து சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story