கொரோனா நிவாரண உதவிகள் - கிருஷ்ணகிரி கலெக்டரிடம் வழங்கல்

கொரோனா நிவாரண உதவிகள் - கிருஷ்ணகிரி கலெக்டரிடம் வழங்கல்
X
கிருஷ்ணகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, நிவாரண உதவிகள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரணத்திற்காக பல்வேறு அமைப்பினர் நிதி வழங்கி வருகின்றனர். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, மைக்ரோ தொழில் சங்கத் தலைவர் லோகநாதன், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியை சந்தித்து, ரூ.1.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

அப்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், ஓசூர் தாலுகா கல்லுகொண்டப்பள்ளி பஞ்சாயத்தில் இயங்கி வரும் டியூரோ பிளக்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 60 படுக்கைகளை, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரிடம் அந்த நிறுவனத்தின் மேலாளர் சார்லஸ் ராபர்ட் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!