ஒசூர் மாநகராட்சியில் 5 அறைகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை

ஒசூர் மாநகராட்சியில் 5 அறைகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை
X

ஓசூர் மாநகராட்சியில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை.

ஒசூர் மாநகராட்சியில் 9வார்டுகளுக்கு ஒரு அறை என 5 அறைகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் அதிமுக,திமுக,பாமக,பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டு வேட்புமனுக்கள் மும்முரமாக நடைப்பெற்று வந்தன.

கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் விநியோகித்து ஒசூர் மாநகராட்சியில் பெறப்பட்டு வந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மாலை 5 மணி வரை ஒசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கு 379 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்று வருகிறது. இதனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈட்டுப்பட்டு, வேட்பாளர்களை மற்றும் அனுமதித்து வருகிறார்.

இதனால் இந்த பகுதியில் அதிகம் கூட்டம் இன்றி காணப்படுகிறது.

இதுக்குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியம், கொரோனா காலத்தில் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க 45 வார்டுகளில் 9 வார்டுகளுக்கு ஒரு அறை என 5 அறைகளில் 5 உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வார்டு வாரிய வேட்பாளர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தாமதமாக வருபவர்களுக்கும் வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றார்.

ஒருவர் ஒன்றிற்கு மேற்ப்பட்ட வார்டுகளிலும், ஒரே வார்டில் அதிக வேட்புமனுக்களையும் செய்திருப்பதால் உரிய மனுவினை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!