கல்லூரி மாணவி மாயம்: பெற்றோர் போலீசில் புகார்

கல்லூரி மாணவி மாயம்: பெற்றோர் போலீசில் புகார்
X
பேரிகை அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது பெண் இவர் சூளகிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் திருமணம் செய்யும் நோக்கில் கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story