பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 பேர் மீது வழக்கு: போலீசார் நடவடிக்கை

பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 பேர் மீது வழக்கு:  போலீசார் நடவடிக்கை
X
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஓசூரில் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நேற்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜயபிரபாகரன் மற்றும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இது குறித்து ஓசூர் டவுன் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக புகாரில் கூறியிருந்தார்.

அதன் பேரில் போலீசார் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் உள்பட 350 பேர் மீது டவுன் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு