பணம் கேட்டு மிரட்டி இளைஞருக்கு பாட்டில் குத்து: இருவருக்கு போலீசார் வலை

பணம் கேட்டு மிரட்டி இளைஞருக்கு பாட்டில் குத்து: இருவருக்கு போலீசார் வலை
X

வயிற்றில் காயத்துடன் சிகிச்சைபெறும் வசந்தகுமார்.

பணம் கேட்டு மிரட்டி இளைஞரை மது பாட்டிலால் வயிற்று பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரீங்ரோட் ஒட்டியே கர்நாடக மாநிலத்தின் மதுபான கடைகள் ஏரளமாக உள்ளன. நேற்று இரவு தோப்பில் அமைந்துள்ள கர்நாடக மதுபான கடைக்கு கூலி வேலை பார்க்கும் பாலக்கோடு பகுதியை சேர்ந்த வசக்குமார்(31) மது குடிக்க சென்றுள்ளர்.

அதே சமையத்தில் மது குடிக்க வந்த அடியாளம் தெரியாத இருவரும் மது வாங்கி, வசந்த் குமார் குடித்துக்கொண்டிருந்த இடத்திற்கு சென்று ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வசந்த் குமாரிடம் பணம் கேட்டு மிரட்டி, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் வருந்தகுமார் பணம் தரமுடியாது என்று கூறியதாக சொல்லபடுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மதுபட்டிளை உடைத்து வசந்த்குமார் வயிற்று பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

ஏற்கனவே போதையில் இருந்த வசந்தகுமார் வயிற்றில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாமல் அங்கேயே சுருண்டு கீழே விழுந்துள்ளார். இன்று காலையில் போதை தெளிந்தவுடன் காயம் ஏற்பட்ட தன் வயிற்றை பிடித்துக்கொண்டே தமிழ்நாடு ஒட்டியுள்ள ரீங்ரோடை வந்து அடைந்து சுருண்டு கீழே விழுந்துள்ளார்.

வசந்த் குமார் கீழே விழுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 இலவச ஆம்புலன்ஸ் வாகனத்திற்க்கு ஃபோன் செய்து வரவைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த மருத்துவர்கள், காயம் பலமாக உள்ளது என்று மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மருத்துவமனை காவல்துறை அதிகாரி முதற்கட்டமாக இது தொடர்பாக சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட கர்நாடக மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள அத்திப்பள்ளி காவல் நிலையத்திற்கும் மற்றும் வசந்தகுமார் கீழே விழுந்த இடம் தமிழக எல்லை என்பதால் சிப்காட் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், நடத்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!