ஓசூர் அரசு மருத்துவமனையில் பஜ்ரங்தள் அமைப்பினர் ரத்த தானம்

ஓசூர் அரசு மருத்துவமனையில் பஜ்ரங்தள் அமைப்பினர் ரத்த தானம்
X

பஜ்ரங்தள் அமைப்பு சார்பாக நடைபெற்ற ரத்ததான முகாம்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் பஜ்ரங்தள் அமைப்பின் சார்பாக ரத்த தானம் வழங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பஜ்ரங்தள் அமைப்பு சார்பாக ரத்ததான முகாம் நடத்தி 55 யூனிட் ரத்தத்தை அரசு மருத்துமனைக்கு வழங்கினர்.

ஓசூரில் உள்ள பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அயோத்தி கரசேவையின் போது, உயிர்நீத்த பக்தர்களின் நினைவாக வருடத்திற்கு ஒருமுறை அரசு மருத்துவமனைக்கு ரத்த நன்கொடை வழங்கி வருகின்றனர். அதேபோல் இந்தாண்டு இன்று காலை 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று தங்களுடைய குருதியை தானமாக வழங்கினர்.

55 யூனிட் பெறப்பட்ட குருதியை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!