ஓசூரில் தற்காப்பு கலை பயிற்சி மாணவர்களுக்கு கருப்பு பட்டை வழங்கும் நிகழ்ச்சி

ஓசூரில் தற்காப்பு கலை பயிற்சி மாணவர்களுக்கு கருப்பு பட்டை வழங்கும் நிகழ்ச்சி
X

ஓசூரில் தற்காப்பு கலை பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு பிளாக் பெல்ட் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓசூரில் தற்காப்பு கலை பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு பிளாக் பெல்ட் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தற்காப்பு கலை பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு பிளாக் பெல்ட் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓசூரில் குங்பூ பயிற்சி பள்ளியில் சிறப்பாக பயிற்சி முடித்த 23 மாணவ மாணவிகளுக்கு கருப்பு பட்டை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அர்விந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதிதர்மர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 23 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கருப்பு பட்டை அணிவித்துக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

முன்னதாக தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அப்போது சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கைத்தட்டி ஆரவாரம் மேற்கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products