தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்
X

ஓசூர் ராம்நகர் பகுதியில்  பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஓசூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் பகுதியில் இன்று காலை பாஜக இளைஞரணி சார்பில் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் கடந்த தீபாவளித் திருநாளில் குறைத்தது போல் தமிழக அரசும் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் பெட்ரோல் டீசலை குறைக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் ப்ரித்திலட்சுமி, மாநில துணைத் தலைவர் நரேந்திரன், மாவட்ட தலைவர் நாகராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி ஈரோட்டில் தொடக்கம்