ஓசூர் மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா

ஓசூர் மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா
X

பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓசூர் மாநகர திமுகவினர்.

ஓசூர் மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழகம் முழுவதும் மறைந்த திமுக பொதுசெயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மாநகர திமுக சார்பில் தாலுகா அலுவலகம் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும் பேராசிரியர் க.அன்பழகனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா மற்றும் நகர திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!