/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களிலும் அமோக வெற்றி பெறும்: ஓபிஎஸ் பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார் ஓ. பன்னீர்செல்வம்

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களிலும் அமோக வெற்றி பெறும்: ஓபிஎஸ் பேட்டி
X

அதிமுக வின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்

அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி பெறும் என்றார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் அதிமுக, திமுக, பாஜக, பாமக, சுயச்சை என வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஓசூர் மாநகராட்சி, கெலமங்கலம், தேன்கனிகோட்டை, பர்கூர் பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினருக்கான போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஓசூரில் தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 10 ஆண்டு காலம் நடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா செய்த சாதனைகளை மக்கள் எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்,ஆனால் திமுக ஆட்சி வந்ததிற்கு பின்னால் அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி பெறும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

Updated On: 9 Feb 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  3. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  9. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  10. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...