ஓசூர் மருத்துவமனையில் கர்ப்பிணி வயிற்றிலேயே உயிரிழந்த குழந்தை: உறவினர்கள் ஆத்திரம்

ஓசூர் மருத்துவமனையில் கர்ப்பிணி வயிற்றிலேயே உயிரிழந்த குழந்தை: உறவினர்கள் ஆத்திரம்
X

ஜமிலாக்கான் தன் கைப்பட எழுதிய புகாரினை தலைமை மருத்துவர் பூபதியிடம் கொடுத்தார் கணவர் சிஞ்சிவி.

ஓசூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி வியிற்றிலேயே உயிரிழந்த குழந்தையால் உறவினர்கள் ஆத்திரம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மருத்துவமனையில் 260 படுக்கைகள் கொண்டதாகவும் தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான புறநோயாளிகள், கர்ப்பிணிகள் என சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேசிய தர சான்றிதழ் பெற்ற இம்மருத்துவமனை அண்மையில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி பகுதியில் காதல் திருமணம் செய்துக்கொண்ட சிரஞ்சீவி - ஜமிலாக்கான் தம்பதி, கர்ப்பமான ஜமிலாக்கான் கர்ப்பம் தரித்த நாள் முதல் ஓசூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

நிறைமாத கர்ப்பிணியான ஜமிலாக்கான், பிரசவத்திற்கான நாளாக நவம்பர் 26 என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் பிரசவத்திற்காக இரு தினங்களுக்கு முன்பு 24 ம் தேதியே நிரை மாத கர்ப்பிணியான ஜமிலாகான் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

நேற்றிரவு வயிற்றினுள் இருந்த குழந்தை உயிரிந்ததாக கூறி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை உயிரிழந்த நிலையில் அகற்றி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவமனை ஊழியர், செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நாள் முதல், மருத்துவர்கள் யாரும் பரிசோதிக்காமல் முறையான சிகிச்சை வழங்காமல் இருந்ததாகவும், பலமுறை வலியுறுத்தியும் செவிலியர்களின் தொலைப்பேசி வழிக்காட்டுதல்படி தூய்மை பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து அரச மருத்துவ மனைக்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இறந்த நிலையில் தாயின் வயிற்றில் உள்ள குழைந்தையை அகற்றாவிட்டால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி அறுவை சிகிட்சை மூலம் குழைந்தையை தாயின் வயிற்றிலிருந்து பிரித்து எடுத்துள்ளனர் அரசு மருத்துவர்கள்.

மேலும் நேற்று இரவு நடந்த சம்பவங்களை குறித்து ஜமிலாக்கான் கணவர் சிஞ்சிவி, தன் கைப்பட எழுதிய புகாரினை தலைமை மருத்துவர் பூபதியிடம் அறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு