கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டி பஜ்ரங்தள் அமைப்பினர் விழிப்புணர்வு பேரணி

கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டி பஜ்ரங்தள் அமைப்பினர் விழிப்புணர்வு பேரணி
X

பஜ்ரங்தள் அமைப்பினரின் விழிப்புணர்வு பேரணி.

பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டி ஸ்லோகங்கள் வாசித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஒசூரில் பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பஜ்ரங்தள் அமைப்பினர் ஸ்லோகங்கள் வாசித்தபடி ஊர்வலமாக சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டத்தில் உள்ள அனைவரும் கோரோணா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஓசூரில் இன்று பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராம்நகரில் துவங்கிய இந்த பேரணி காந்திசிலை வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் சென்றவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி அனைவரும் கட்டாயம் அரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் காந்தி சிலை பகுதியில் பஜ்ரங்தள் அமைப்பினர் அனைவரும் கடைப்பிடிப்போம் கடைப்பிடிப்போம் அரசாங்க விதிமுறைகளை கடைபிடிப்போம் என்ற கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!