மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பலி

மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பலி
X

பைல் படம்.

ஓசூர் அருகே மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி. கட்டிட மேஸ்திரியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நல்லூர் செக்போஸ்ட் பகுதியில் உள்ள கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் மூன்றாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த அவரை சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீஸ் எஸ்ஐ நரசிம்மன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!