ஓசூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

 ஓசூர் மாநகராட்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஓசூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேர்தல் வாக்குறுதிகளை நிரவேரராமல், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் விடிய அரசாக செயல்பட்டு வருவதை கண்டிக்கும் விதமாக அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் ஓசூர் மாநகராட்சி ராம்நகரில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன பேருரையாற்றினார். அப்போது பேசிய அவர் கர்ணனித்தியலேயே அந்த கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லை ஸ்டாலினால் எப்படி கட்டுப்படுத்த முடியும், திமுகவின் அனைத்து தொடர்களிலும் அவரே சட்டமன்ற உறுப்பினர், அவர்களே ராஜ்ஜியம் என நினைத்து கட்சியில் ஊடுருவி ஊழல் செய்து பணத்தை சம்பாதிக்கும் குறிக்கொளில் உள்ளார்.

ஆனால் ஊடகங்கள் ஏதோ உழைத்து கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றி அதிமுக மீது பொய்யான வழக்குகளை போட்டு ரைட் நடத்தி வருகிறார் தவறு இருந்தால் கணக்கு காண்பியுங்கள். மக்களை திசை திருப்பவத்தில் திமுகவிற்கு கை வந்த கலை, திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிரவேற்ற கோரி இந்த ஆர்ப்பாட்டம் தவிர அரசியல் காழ்ப்புணர்ச்சி எங்களுக்கு இல்லை நாங்கள் ஜனநாயகத்தை நம்புவார்கள் என பேசினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!