ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 740 கன அடியாக அதிகரிப்பு

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 740 கன அடியாக அதிகரிப்பு
X

கெலவரப்பள்ளி அணை.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 740 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநில தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் 580 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 740 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 41.33 அடியாக நீர் இருப்பு உள்ளது.

இதனால் தென்பெண்ணையாற்றில், 720 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. வலது, இடது வாய்க்காலில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. தென்பெண்ணை ஆற்றில் நுங்கும், நுரையுமாக தண்ணீர் வெளியேறிய நிலையில், ஆங்காங்கு ரசாயன நுரை தேங்கி நிற்கிறது.

நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடரும் பட்சத்தில், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story