ஓடும் பஸ்சில் தம்பதியினர் கைப்பையில் இருந்து 52 சவரன் தங்க நகை திருட்டு
ஓசூரில் ஓடும் பஸ்சில் 52 பவுன் நகையை பறிகொடுத்த தம்பதியினர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மத்தம் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் சாந்தப்பா(65). இவர் தனது மனைவியுடன் பெங்களூரு ராஜாஜி நகர் பகுதியில் வசித்து வரும் மகளின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பிறகு அங்கிருந்து கர்நாடகா மாநில அரசு பேருந்தில் ஏறி ஓசூர் சிப்காட் பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்றார்.
அப்போது 4 பெண்கள் இறங்க வழிவிடாமல் இருவரையும் உரசி நின்றதாகவும் அதை சமாளித்து கீழே இறங்கிய பிறகு கைப்பையின் ஜிப்பு திறந்திருந்ததால் அதனை பார்த்தபோது 52 சவரன் தங்கநகை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து சிப்காட் பேருந்து நிறுத்தத்தில் தான் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதாக சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் தங்க நகைகளை பறிகொடுத்த தம்பதியினர் ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu