கெலவரப்பள்ளி அணைக்கு 2760 கனஅடி நீர்வரத்து: தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை
கெலவரப்பள்ளி அணையில் ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நேற்று வினாடிக்கு 1055கனஅடிநீர் மட்டுமே வந்த நிலையில் இன்று எதிர்பாராத வகையில் 2760 கனஅடிநீர் வரத்தாகவும், தென்பெண்ணை ஆற்றில் 2508 கனஅடிநீர் வெளியேற்றப்படுவதால் இன்றும் ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஒசூர் பகுதிகளில் நேற்று தொடர்ந்து 8 மணி நேரம் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வரக்கூடிய நீரில் இரசாயன கழிவுகள் வெளியேற்றப்படுவதால் அணைக்கு வரக்கூடிய நீர், நுரைபொங்கி காட்சியளிக்கிறது.
கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் மொத்தக்கொள்ளளவான 44.28அடிகளில் 42.64அடிகள் நீர் சேமிக்கப்பட்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் 2508 கனஅடி நீரால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றை கடக்கவோ, வாகனங்கள் மற்றும் கால்நடைகளை கழுவவோ செல்ல வேண்டாமென்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu