ரூ.2.54 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருட்கள், மினி லாரி பறிமுதல்

ரூ.2.54 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருட்கள், மினி லாரி பறிமுதல்
X

பைல் படம்

மத்திகிரியில் ரூ.2.54 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள், மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் நேற்று மத்திகிரி அருகே ஓசூர், தளி சாலையில் கர்னூர் என்னும் இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரு மினி லாரி வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 475 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அந்த புகையிலைப்பொருட்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை பகுதிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து

புகையிலைப்பொருட்களை கடத்தியதாக செங்கத்தைச் சேர்ந்த இந்துராஜா, திருவண்ணாமலை விமல், விஸ்வநாதன் ஆகிய 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள 475 கிலோ புகையிலைப் பொருட்கள், மினி லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு