ஓசூர் மாநகராட்சியில் இன்று ஒரே நாளில் 116 பேர் வேட்புமனு தாக்கல்

ஓசூர் மாநகராட்சியில் வேட்புமனுவை தாக்கல் செய்த பெண் வேட்பாளர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் உள்ள 45 வார்டுகளில் அதிமுக, திமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டு வேட்புமனுக்கள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.
கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் விநியோகித்து ஒசூர் மாநகராட்சியில் பெறப்பட்டு வரும் நிலையில் 4 தினங்களாக நேற்றுவரை 56 மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் 23 சுயேட்சைகள் என இன்று ஒரே நாளில் 116 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக 172 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதி நாளான நாளை மேலும் வேட்புமனு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu