பூக்கள் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி
கோடை வெயில் அதிகரிப்பின் காரணமாக , கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பூக்கள் சாகுபடி குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நல்ல மண் வளம் நிறைந்து காணப்படுவதால் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக ரோஜா, ஜெர்பரா , அரளி , செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது . தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஓசூர் பகுதியில் பூக்கள் விளைச்சல் குறைந்து மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து வருகிறது.
ஒரு கிலோ மல்லிப்பூ ரூ. 800-க்கும் , கனகாம்பரம் ரூ. 800-க்கும் , சாமந்தி ரூ.120, சம்பங்கி 100க்கும் , ரோஸ் 100க்கும் , செண்டுமல்லி 20-க்கும் விற்பனை செய்யப்பட்டது . பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ஓசூரில் இருந்து பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட மாநில வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu