சாலையில் சென்ற டெம்போவில் திடீர் தீ

சாலையில் சென்ற டெம்போவில் திடீர் தீ
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த டெம்போவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கிருஷ்ணாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. டெம்போ டிரைவர். இவர் நேற்று வண்டியில் கொத்தமல்லி ஏற்றிக்கொண்டு சூளகிரி மார்க்கெட்டுக்கு வந்துள்ளார். அவருடன் கோடியப்பன் என்பவரும் உடன் வந்தார். அங்கு கொத்தமல்லி தழைகளை இறக்கி விட்டு திரும்பி செல்லும் போது டெம்போவில் புல் கட்டு ஏற்றிச் சென்றுள்ளனர் . இந்நிலையில் இண்டிகானா சாலையில் சென்று கொண்டிருந்த போது புல் கட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது.

பின்னர் டெம்போ முழுவதும் தீ பரவியது. இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான சேட்டு, வண்டியை சாலையோரம் திருப்பியுள்ளார் . இதில் நிலைதடுமாறிய டெம்போ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது . இந்த விபத்தில் சேட்டு மற்றும் கோடியப்பன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் . உடனே அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் டெம்போ முழுவதுமாக எரிந்து நாசமானது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்