திருமண ஆசை காட்டி இளைஞர் அடித்து கொலை

திருமண ஆசை காட்டி இளைஞர் அடித்து கொலை
X

ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே பேரிகை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காண்றப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணா (50). இவர் பெங்களூரு ஜேபி நகர் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.இவரது காய்கறி கடை அருகே கடை நடத்தி வருபவர் வசந்த் (25). இவரும் நாராயணா வின் இரண்டாவது மகளான சௌமியாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் நாராயணாவுக்கு தெரிய வரவே குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காதல் விவகாரத்தில் மனம் நொந்துபோன நாராயணா, தனது மகள் சௌமியாவை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு வசந்திடம் உனக்கும் எனது மகளுக்கும் திருமணம் செய்து வைக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி ஒசூர் அருகே சொந்த ஊரான காண்றப்பள்ளி கிராமத்திற்கு அவரை அழைத்து வந்துள்ளார். காரில் வந்த இவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் குடிபோதையில் இருந்த நாராயணா, வசந்த்தை உருட்டு கட்டை மற்றும் கற்களாலும் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து நாராயணா பேரிகை காவல் நிலையத்தில் நள்ளிரவில் சரணடைந்துள்ளார்.

இந்த காெலை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் உயிரிழந்து கிடந்த இளைஞர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி