கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணம் முழுவதுமாக மீட்பு
கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ,
ஓசூரில் உள்ள தனியார் நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் 7 பேர் நாக்பூர் வழியாக தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க உடனடியாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போலீசாருக்கு தகவல் அளித்தோம். இந்த அடிப்படையில் சைதராபாத், ஹைதராபாத், ராச்சகுண்ட உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். மூன்று மாநிலங்களும் இணைந்து முறையாக திட்டமிட்டு செயல்பட்டதால் 14 மணிநேரத்தில் சம்ஷாபாத் என்ற இடத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து 25 கிலோ தங்க நகை, 96 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கார் மற்றும் லாரி மேலும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu