சாமந்தி பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

சாமந்தி பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
X

விலை வீழ்ச்சி காரணமாக செய்தியில் விடப்பட்ட சாமந்தி பூக்கள்

தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் சாமந்தி பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சாமந்தி பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பூக்களை சாலைகளில் கொட்டி சென்றனர். அந்த நிலை தற்போது வரை நீடித்து வருகிறது.

ஓசூர் மலர் சந்தையில் தற்போது ஒரு கிலோ சாமந்தி பூக்கள் ரூ.2-க்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் தோட்டத்தில் விட்டுள்ளனர். இதனால் தோட்டங்களில் பூக்கள் காய்ந்து கருகி வருகிறது..

இதுகுறித்து தளி அருகே உள்ள பேலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. விளைச்சல் அதிகரிப்பு மற்றும் வரத்து அதிகரிப்பதால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பறிப்பு கூலி கூட கிடைக்கவில்லை என்று கவலையுடன் கூறினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!