வேளாண் அறிவியல் மையத்தில் உலக தென்னை தினம் கொண்டாட்டம்

வேளாண் அறிவியல் மையத்தில் உலக தென்னை தினம் கொண்டாட்டம்
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது.

உலக தென்னை தினம் செப்டம்பர் 2ம் நாள் கொண்டாடப்படுகிறது. ஆசிய பசிபிக் தேங்காய் குழுமம் மூலம் 2009ம் ஆண்டு முதல் தென்னை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆசிய பசிபிக் தேங்காய் குழுமத்தில் இந்தியாவுடன் சேர்த்து 18 நாடுகள் உறுப்பினராக உள்ளது. உலக தென்னை தினம் தேங்காய் உற்பத்தி, விற்பனை, விவசாயத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் இன்று உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அறிவியல் மையத்தின் முதன்மை விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். இதில் தென்னை தினம் குறித்த தொழில்நுட்ப கருத்துக்களை தொழில்நுட்ப வல்லுநர் ரமேஷ், சுருள் வெள்ளை ஈ மேலாண்மை குறித்து பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கோவிந்தன் ஆகியோர் விளக்கினர்.

இதில், கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றி, விவசாய பயனாளிகளுக்கு தென்னை மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குநர் பச்சையப்பன், வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார், வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!