பாரூர் பெரிய ஏரியிலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
பாரூர் பெரிய ஏரியிலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீரை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு ஆறு ஊராட்சிகளில் உள்ள 2400 ஏக்கர் பாசனம் பெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக கெலவரப்பள்ளி கேஆர்பி மற்றும் பாரூர் ஒரு பெரிய ஏரி உள்ளது. இந்த நீர்நிலைகளில் இருந்து ஆண்டுதோறும் இரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முதல் போக சாகுபடி முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என மாவட்ட விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்படி இன்று முதல் கட்டமாக பாரூர் பெரிய ஏரியிலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தண்ணீரை திறந்து விட்டார்.
பாரூர் பெரிய ஏரியின் வலது மற்றும் இடது புற கால்வாய் மூலமாக பாரூர் அரசம்பட்டி கீழ்குப்பம் கோட்டப்பட்டி ஜிங்கல்கதிரம்பட்டி தாதம்பட்டி ஆகிய ஆறு ஊராட்சிகளில் உள்ள 2400 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் இரண்டு கால்வாய்கள் மூலமாக வினாடிக்கு 60 கன அடி வீதம் இன்று முதல் 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பாசன விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் வகையில் பயன்பெற வேண்டுமென ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார் உதவி பொறியாளர் சையத் ஜாகிர் உதின் மற்றும் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu