மயானம் ஆக்கிரமித்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

மயானம் ஆக்கிரமித்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
X

பர்கூர் அருகே மயானத்தை ஆக்கிரமித்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, மயானத்தை ஆக்கிரமித்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஓதிகுப்பம் அருகே உள்ள பசவண்ணகோவில் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஓதிகுப்பம், பசவண்ணகோவில் கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஓதிகுப்பம், பசவண்ணகோவில் கிராமங்களுக்கு இடையில், சின்னஏரி அருகே, 50 ஆண்டுகளாக மயானம் உள்ளது. இவற்றை இரண்டு கிராம மக்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த மயானத்தின் அருகில், பொன்னுசாமி என்பவர் 5 ஏக்கர் நிலத்தை வாங்கினார். கடந்த இரண்டு மாதங்களாக மயானத்திற்கு சொந்தமான இடத்தையும், அருகில் இருந்த தண்ணீர் குளத்தையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டு, முள் செடியால் வேலி அமைத்து பொதுமக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தடை செய்து வருகிறார்.

இதனால், இறந்தவர்களை புதைக்க இடம் இன்றி இரண்டு கிராம மக்களும் தவிக்கின்றனர். எனவே மயானத்தை மீட்டு, ஆக்கிரமித்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story