பெரியபனமுட்லு கிராமத்தில் பயிர் கழிவு மேலாண்மை குறித்து ஒருநாள் பயிற்சி

பெரியபனமுட்லு கிராமத்தில் பயிர் கழிவு மேலாண்மை குறித்து ஒருநாள் பயிற்சி
X
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியபனமுட்லு கிராமத்தில் பயிர் கழிவு மேலாண்மை குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் இன்று நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார மேளாண்மை துறையின் கீழ் அட்மா திட்டத்தின் வாயிலாக பயிர்கழிவு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி அஞ்சூர் அடுத்த பெரியபனமுட்லு கிராமத்தில் நடந்தது.

இப்பயிற்சியில் பர்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராணி தலைமை வகித்து, வேளாண்துறையின் திட்ட செயலாக்கம் குறித்து விளக்கினார். பர்கூர் வேளாண்மை அலுவலர் சக்திவேல் மண்புழு மற்றும் ஊட்டமேற்றிய தொழுஉரம் உற்பத்தி குறித்து விளக்கினார்.

இதில் பயிற்சியாளராக கலந்துகொண்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மாவட்ட ஆலோசகர் பரசுராமன், பண்ணை கழிவு மேலாண்மை குறித்தும், கழிவுகளை விரைவில் மட்கச் செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் எடுத்துரைத்தார். அட்மா தட்ட வட்டார மேலராள் பார்த்தீபன், டீகம்போசர் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார். உதவி வேளாண்மை அலுவலர் தனசேகர், நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் நெறிமுறைகள் குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சண்முகம், கிரிஜா மற்றும் வார்டு உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story