திரெளபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா -அதிமுக கே.பி.முனுசாமி பங்கேற்பு

திரெளபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா  -அதிமுக கே.பி.முனுசாமி பங்கேற்பு
X
பெண்ணேஸ்வரமடம் கிராமத்தில் திரெளபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பங்கேற்பு

பெண்ணேஸ்வரமடம் கிராமத்தில் நடந்த திரெளபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி எம்.எல்.ஏ. அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் பெண்ணேஸ்வரமடம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கழக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி,.முனுசாமி, கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்பொழுது அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் இருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!