மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
ஆந்திர மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில் கிருஷ்ணகிரி கலெக்டர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆந்திர மாநில எல்லையான குருவிநாயனப்பள்ளி, வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட அரியனப்பள்ளி சோதனைச்சாவடிகளில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையையொட்டி, ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையோரங்களில் 11 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கலெக்டர் கூறும்போது,
' வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லை, கர்நாடக எல்லையான நேரலகிரி, ஓசூர் தொகுதிக்குட்பட்ட மத்திகிரி, கொத்தகொண்டப்பள்ளி டி.வி.எஸ்., பூனப்பள்ளி, கர்னூர், பாகலூர், கக்கனூர் ஆகிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பர்கூர் தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லையான வரமலகுண்டா, குருவிநாயனப்பள்ளி, தளி தொகுதிக்குட்பட்ட கர்நாடக மாநில எல்லையான கும்ளாபுரம் மற்றும் கெம்பட்டி ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மது கடத்தலை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அலுவலர்கள் தீவிர சோதனையை மேற்கொள்ள வேண்டும்.' என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu