காலபைரவர் கோவில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்.
Kalabhairava Temple Krishnagiri-கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் மிகவும் பழமையான காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை, 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், பூர்ணாஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பகல் 12 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும், அண்டைய மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையில் உள்ள தஷ்ண கால பைரவர் மற்றும் கந்திகுப்பம் கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் சூரன்குட்டை, கந்திகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu