வயிற்று வலியால் மகன் தற்கொலை: வேதனையில் தாயாரும் விஷம் குடித்து உயிரிழப்பு

வயிற்று வலியால் மகன் தற்கொலை: வேதனையில் தாயாரும் விஷம் குடித்து உயிரிழப்பு
X

விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட கஸ்தூரி மற்றும் அவரது மகன் பிரேம்குமார்.

வயிற்று வலியால் மகன் தற்கொலை செய்துகொண்ட வேதனையில் அவரது தாயாரும் விஷம் குடித்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா கார குப்பம் அருகே எமகல்நத்தம் சாலையில் வசித்து வருபவர் பூபதி ( வயது 50). இவர் ஹைதராபாத்தில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார் . இவரது மனைவி கஸ்தூரி (45 ). இவர்களுக்கு பிரேம்குமார் (23), புனித் ( 21 )என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதில் பிரேம் குமாருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மாற்று கிட்னி பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். அதனால் பிரேம் குமாருக்கு அவரது தாய் கஸ்தூரிமிடருந்தே கிட்னி பெற்று பொருத்த திட்டமிடப்பட்டது .

ஆனால் அந்த நேரத்தில் பிரேம் குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது .அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருந்தது தெரியவந்தது . இதனால் பிரேம் குமாருக்கு மாற்று கிட்னி பொருத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவர் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த பிரேம்குமார் நேற்று இரவு தனது வீட்டில் விஷத்தை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அப்போது பார்த்த தாய் கஸ்தூரி, மகன் விஷம் அருந்தி மயங்கி விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் மகன் வயிற்று வலியால் விஷமருந்து தற்கொலை செய்ததால் கஸ்தூரி மிகுந்து மன வேதனை அடைந்துள்ளார்.

இந்த நிலையில் மகன் இறந்த சோகத்தில் இருந்த அவர், மகன் இல்லாத இந்த உலகத்தில் தான் வாழ்வதை விட இறப்பதே மேல் என முடிவு எடுத்த கஸ்தூரி அவரும் விஷத்தை குடித்துள்ளார்.

இந்த நிலையில் இரவு வீட்டிற்கு வந்த கஸ்தூரியின் இரண்டாவது மகன் புனித் தனது தாயும், தனது அண்ணனும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். .

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கஸ்தூரி மற்றும் பிரேம் குமார் இருவரும் விஷமருந்தியதால் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கஸ்தூரி மற்றும் அவரது மகன் பிரேம்குமார் ஆகிய இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இந்த சம்பவம் தொடர்பாக பர்கூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உடல்நலக்குறைவால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வேதனையில் அவரது தாயாரும் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!