கிருஷ்ணகிரியில் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரியில் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி
X

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கம் நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு எம்எல்ஏ மதியழகன் ரேஷன் கார்டை வழங்குகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் மல்லப்பாடி கிராமங்களில் கீழ் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் மல்லப்பாடி கிராமங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிகளுக்கு கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். பர்கூர் தாசில்தார் குருநாதன் வரவேற்றார். இதில், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் கலந்து கொண்டு பர்கூரில் 38பயனாளிகளுக்கும், மல்லப்பாடியில் 27 பயனாளிகளுக்கும் என மொத்தம் 65பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டுகளை வழங்கி பேசியதாவது:

தமிழக அரசின் திட்டங்கள் தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து படிபடியாக நிறைவேற்றப்படும். இதுவரை குடும்ப அட்டையை பெற பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டு வந்தனர். இனி தகுதியான அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு தேர்தல் வாக்குறுதியின் போது அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் படிபடியாக நிறைவேற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நாகராஜ், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த வக்கீல் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india